உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசத்தில் சீன அரசுத்தலைவர் ஷிச்சின்பிங்கின் ஆய்வுப் பயணம்

சீன அரசுத்தலைவர் ஷிச்சின்பிங் அக்டோபர் 16ஆம் நாள் சீனாவின் உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசத்தைச் சேர்ந்த ஊலன்ட்சாப் நகரில் ஆய்வுப் பயணம் மேற்கொண்டபோது கூறுகையில், பசுமை வளர்ச்சியானது உயர்தர வளர்ச்சியின் இன்றியமையாத அம்சமாக உள்ளது என்றும், உயர்தர வளர்ச்சியையும் உயர்தர பாதுகாப்பையும் ஒருங்கிணைக்கவும், மலைகள், ஆறுகள், காடுகள், வயல்கள், ஏரிகள், புல்வெளிகள் மற்றும் பாலைவனங்களின் ஒருங்கிணைந்த பாதுகாப்பு மற்றும் முறையான மேலாண்மையில் ஊன்றி நிற்கவும் வேண்டும் என்றும், கரியமில வாயு குறைப்பு, மாசுபாடு குறைப்பு, பசுமைமயமாக்கம் மற்றும் வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு, சூழலியலுக்கான முன்னுரிமை மற்றும் பசுமை வளர்ச்சிப் பாதையை உறுதியாக பின்பற்றுவோம் என்றும் தெரிவித்தார்.

இப்பயணத்தின்போது ஷிச்சின்பிங் ஹுவாங்கிஹாய் இயற்கை பாதுகாப்பு மண்டலத்துக்கு வருகை தந்தார். அங்கு, உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான முயற்சிகள், ஹுவாங்கிஹாயில் ஒட்டுமொத்த சுற்றுச்சூழல் மேலாண்மை மற்றும் சூழலியல் அமைப்புமுறை மறுசீரமைப்பில் ஏற்பட்டுள்ள உள்ளூர் முன்னேற்றம் குறித்த அறிக்கைகளைக் கேட்டறிந்தார். மேலும், அவர் ஈர நிலச் சூழலியல், அப்பகுதியில் வசிக்கும் பறவைகள் பற்றிய நிலைமையை அறிந்து கொள்ள அவர் நேரடி பயணம் மேற்கொண்டார்.

அதைத் தொடர்ந்து, ஷிச்சின்பிங் சஹார் உயர் தொழில்நுட்ப வளர்ச்சி மண்டலத்தைப் பார்வையிட்டார். அங்குள்ள கண்காட்சி அரங்கில், “கிழக்கு தரவு, மேற்கு கணினி” எனும் திட்டத்தின் கட்டுமானம், பசுமைக் கணினி ஆற்றல் தொழில்துறையின் வளர்ச்சி ஆகிய துறைகளில் உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேச அரசு மேற்கொண்டுள்ள முயற்சிகளை அவர் அறிந்துகொண்டார்.

தவிர, ஷிச்சின்பிங் உள்ளூர் தனிச்சிறப்புடைய வேளாண் மற்றும் கால்நடைப் பொருட்களின் கண்காட்சியையும் பார்வையிட்டார். மேலும், விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பவர்களின் வருமானத்தை அதிகரிக்கும் வகையில், உற்பத்திக்கும் விற்பனைக்கும் இடையிலான தொடர்பை வலுப்படுத்த வேண்டும் என்று அவர் ஊக்குவித்தார்.

 

Please follow and like us:

You May Also Like

More From Author