தனுஷ் 56 (D56): தனுஷுக்கு ஜோடியாகும் ‘தெய்வத்திருமகள்’ சாரா அர்ஜுன்?  

Estimated read time 1 min read

நடிகர் தனுஷின் 56-வது திரைப்படத்தில் (D56), அவருக்கு ஜோடியாக நடிகை சாரா அர்ஜுன் நடிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
‘லப்பர் பந்து’ திரைப்படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்த இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இந்தப் படத்தை இயக்கவுள்ளார்.
முன்னதாக, இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க நடிகை ருக்மணி வசந்த் ஒப்பந்தம் செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது.
ஆனால், அவர் பிரசாந்த் நீல் – ஜூனியர் என்டிஆர் இணையும் புதிய படத்தில் நடிக்க அதிக நாட்கள் ஒதுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதால், ‘D56’ திரைப்படத்திலிருந்து அவர் விலகிவிட்டதாக தெரிகிறது.
இதனைத் தொடர்ந்து, அந்த இடத்திற்கு படக்குழு தற்போது சாரா அர்ஜுனை அணுகியுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author