“நாம் அடிக்கிற அடியில் திமிரெடுத்த பாஜக அடங்கியே ஆகவேண்டும்”- மு.க.ஸ்டாலின்

Estimated read time 1 min read

நாடாளுமன்றத்தில் நாம் அடிக்கிற அடியில் திமிரெடுத்த பாஜக அடங்கியே ஆகவேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தருமபுரியில் பிரச்சாரம் மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “நாடாளுமன்றத்தில் நாம் அடிக்கிற அடியில் திமிரெடுத்த பாஜக அடங்கியே ஆகவேண்டும். தேர்தலை விட சுய மரியாதையே முக்கியம், பாஜகவின் தொகுதி மறுவரையறைக்கு எதிராக முழங்க அனைத்து எம்பிக்களையும் டெல்லிக்கு செல்ல உத்தரவிட்டுள்ளேன்.

இது தமிழ்நாட்டுக்கான போர். இதுலயாவது கொஞ்சம் சுயமரியாதையோட நடந்து கொள்ளுங்கள் பழனிசாமி அவர்களே… 200 ஆண்டுகளுக்கு முந்தைய பிற்போக்கு சமூகத்தை உருவாக்க பாஜக முயற்சிக்கிறது. அப்போதுதான் மக்களை மயக்கி, உழைப்பை சுரண்டி ஒரு சிலர் மட்டும் வளர முடியும்.

இந்தியாவிற்கே வழிகாட்டுகிற மாடல் ‘திராவிட மாடல்’ என்று எல்லோரும் சொல்லும் அளவிற்குத் தமிழ்நாட்டைத் தலைநிமிர வைத்துள்ளோம். அதனால்தான் துணிச்சலுடன் உங்கள் முன்பு வாக்குக் கேட்டு நாங்கள் நிற்கிறோம். சூடு, சொரணை இல்லாமல் தமிழ்நாட்டை விட்டுக்கொடுத்து அடிமையாக இருப்பதைத்தான் தனது வாழ்நாள் பெருமையாக எடப்பாடி பழனிசாமி நினைக்கிறார். யாரோ ஒரு சிலர் மட்டும் வளர்ந்தால் அது Business. எல்லோரும் வளர வேண்டும், எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்று நினைப்பதுதான் ‘திராவிட மாடல்’ ஆட்சியின் Success” என்றார்.

Please follow and like us:

You May Also Like

More From Author