ஆம்னி பேருந்து கட்டணம் இருமடங்கு உயர்வு  

Estimated read time 0 min read

வார இறுதி நாட்கள், முகூர்த்த தினம், ஓணம் மற்றும் மிலாடி நபி உள்ளிட்ட பண்டிகைகளை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்ல நினைத்த பயணிகளுக்கு இன்று அதிர்ச்சி காத்திருந்தது.
இந்த விடுமுறை நாட்களை கருத்தில் கொண்டு ஆம்னி பேருந்துகளின் கட்டணம் இருமடங்காக உயர்த்தப்பட்டு இருக்கிறது.
இதனால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
டிக்கெட்டின் விலை குறைந்த பட்சம் ரூ.2000 முதல் அதிகபட்சமாக ரூ.4,500 வரை விற்கப்படுகிறது.
உதாரணமாக, சென்னை கிளம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து திருநெல்வேலிக்கு ரூ.3990 மற்றும் நாகர்கோவிலுக்கு ரூ.3990 என டிக்கெட் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்கள் பலரும் ஊருக்கு செல்ல முடியாமல் அவதியுற்றுள்ளனர்.
இது பற்றி சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கைகள் வலுத்து வருகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author