திருச்சி கிழக்கை ராஜினாமா செய்கிறாரா விஜய்?

Estimated read time 1 min read

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026-ன் முடிவுகள் ஒரு வரலாற்று மாற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், முதலமைச்சராகப் பதவியேற்க உள்ள விஜய் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியில் ஒரு முக்கிய முடிவை எடுக்க உள்ளார்.
நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்ற விஜய், நிர்வாக வசதிக்காக திருச்சி கிழக்கு தொகுதியிலிருந்து ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அங்கு நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலில், ஊழலுக்கு எதிராகப் போராடி வரும் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் அவர்களைத் தவெக வேட்பாளராக நிறுத்த ஆலோசனை நடைபெற்று வருகிறது.
இது தவிர, லால்குடியில் தோல்வியடைந்த முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் அல்லது அவரது மகன் பெயரும் பரிசீலனையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

You May Also Like

More From Author