பஞ்சாப்பில் பதற்றம் : 2 மணி நேரத்தில் 2 குண்டுவெடிப்பு..!!

Estimated read time 1 min read

பஞ்சாபின் அமிர்தசரஸ் மற்றும் ஜலந்தர் நகரங்களில், குண்டு வெடிப்பு சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தின; இவ்விரு சம்பவங்களும் பாதுகாப்பு நிலையங்களுக்கு மிக அருகில் நிகழ்ந்தன.

ஜலந்தர் பகுதியில் ஸ்கூட்டரில் வைத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, அமிர்தசரஸ் பகுதியில் நேற்றிரவு மற்றொரு வெடிகுண்டு தாக்குதல் சம்பவம் நிகழ்த்தப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜலந்தரில் உள்ள எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) தலைமையகத்தின் பிரதான வாயிலுக்கு வெளியே இரவு 8 மணியளவில் முதல் சம்பவம் பதிவானது . அப்போது, தலைமையகத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த ஒரு ஸ்கூட்டர் தீப்பிடித்ததால் அப்பகுதியில் பீதி ஏற்பட்டது. இந்த வெடிப்பின் தாக்கம் சுமார் 300 மீட்டர் தொலைவு வரை உணரப்பட்டது. இதில், ஒரு காரின் ஜன்னல்களும், ஒரு கடையின் கண்ணாடிகளும் நொறுங்கின,
எல்லைப் பாதுகாப்பு படையின் தலைமை அலுவலகத்தின் அருகே நிகழ்ந்த இந்த அடுத்தடுத்த சம்பவத்தை தொடர்ந்து, அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

You May Also Like

More From Author