தமிழகத்தின் புதிய முதலமைச்சராக ஜோசப் விஜய் இன்று முறைப்படி பதவியேற்றுக்கொண்ட வரலாற்றுத் தருணத்தில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவருக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள திரு. சி. ஜோசப் விஜய் அவர்களுக்கு வாழ்த்துகள். அவரது பதவிக்காலம் சிறப்பானதாக அமைய நல்வாழ்த்துகள்” என்று தமிழில் பதிவிட்டுள்ளார்.
ஒரு புதிய மாநில முதலமைச்சர் பொறுப்பேற்றவுடன் பிரதமர் இவ்வளவு விரைவாக வாழ்த்துத் தெரிவிப்பது, இரு தரப்புக்கும் இடையே நிலவும் ஒரு சுமுகமான அரசியல் நாகரிகத்தையே வெளிப்படுத்துகிறது.
முதலமைச்சர் விஜய்க்கு தமிழில் வாழ்த்துச் சொன்ன பிரதமர் மோடி
