சீன சரக்கு வர்த்தகத்தின் மொத்த ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மதிப்பு, இவ்வாண்டின் முதல் 7 மாதங்களில் 30.13 இலட்சம் கோடி யுவானாக இருந்தது என சீனா 7ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டின் அதே காலத்தில் இருந்ததை விட இது 17.3 விழுக்காடு அதிகரித்துள்ளது. குறிப்பாக, ஜுலை மாதம், உயர் தொழில் நுட்ப உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதி அதிகரிப்பு வேகம் 50 விழுக்காட்டைத் தாண்டி, ஏற்றுமதி அதிகரிப்புத் தொகையில் சுமார் 60 விழுக்காடு வகிக்கிறது. பாதுகாப்புவாதம் தலைதூகியுள்ள நிலையில், உலக வர்த்தக அதிகரிப்பு வேகம் குறைந்திருந்தாலும், “சீன வர்த்தக மதிப்பு முன்கணிப்பை தாண்டியுள்ளன” என்றும், குறிப்பாக, “செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட முன்னணித் துறையில் சிறந்த செயல்திறன் காணப்பட்டுள்ளன” என்றும் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் உள்ளிட்ட வெளிநாட்டு செய்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சீனாவின் வெளிநாட்டு வர்த்தகம் சிறப்பாக உள்ள காணரம் என்ன என்பது பற்றி சீன ரென்மின் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் வாங் சியாவ்சோங் கூறுகையில், உலகில் மிக முழுமையான தொழிற்துறை அமைப்பு முறை சீனாவுக்கு உண்டு. பயனுள்ள முறையில் வினியோகத்தையும் மாபெரும் இறக்குமதியை நனவாக்கி, வெளிநாட்டு வர்த்தக வளர்ச்சிக்கு அடிப்படையிட முடியும். அதே வேளையில், சீனாவின் மிக பெருமளவிலான சந்தை, புத்தாக்க உந்து, திறப்பு விரிவாக்கல் நலன்கள் முதலிய மேம்பாடுகளும், வெளிநாட்டு வர்த்தக அதிகரிப்பை முன்னேற்றுள்ளன என்று தெரிவித்தார்.
அளவில் நிதானமாக அதிகரிப்பதோடு, வெளிநாட்டு வர்த்தக கட்டமைப்பு புதுமை மற்றும் பசுமைக்காக மாறியுள்ளது.
“சீனாவின் இறக்குமதி அதிகரிப்பு உலக வர்த்தகத்தின் எதிர்காலத்துக்கு ஆதரவளிக்கிறது”. சீனா, வர்த்தகக் கூட்டாளிகளுடன் ஒத்துழைப்பு மேற்கொண்டு, கூட்டு வெற்றியைப் பெறும் என்று அமெரிக்காவின் யூரேஷியா மதிப்பாய்வு என்ற செய்தி ஊடகம் கருத்து தெரிவித்தது.
மேலும், இவ்வாண்டின் முதல் 7 மாதங்களில், சீனா, 180க்கும் மேலான நாடுகள் மற்றும் பிரதேசங்களுடன் மேற்கொண்ட ஏற்றுமதி மற்றும் இறக்குமதித் தொகை அதிகரிப்பை நிலைநிறுத்தியுள்ளது. இவ்வாண்டின் முற்பாதியில், சுமார் 4800 அந்நிய முதலீட்டு நிறுவனங்கள், சீனாவிலுள்ள முதலீட்டை கூடுதலாக அதிகரித்து, உண்மையான செயலின் மூலம் சீன பொருளாதாரத்துக்கான நம்பிக்கையை தெரிவித்தன என்பது குறிப்பிடத்தக்கது.
