தேசிய தின விடுமுறைக்கு முன் கடைசி வர்த்தக நாளான செப்டம்பர் 30ஆம் நாள், சீனாவின் ஷாங்காய் பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 8.06 சதவீதம் உயர்ந்து, 3336.50 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது.
மேலும் ஷென்சென் பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 10.67 சதவீதம் உயர்ந்துள்ளது.
இந்நாளில் பங்குச் சந்தைகளில் மொத்த வர்த்தக தொகை 2.6 லட்சம் கோடி யுவானை எட்டி, வரலாற்றில் இல்லாத அளவிற்கு புதிய உச்சத்தை எட்டியது குறிப்பிடத்தக்கது.