“ஒவ்வொரு தொகுதியிலும் 3,000 பேருக்கு….” தலைநகரம் முதல் பட்டிதொட்டி வரை…. முதல்வர் விஜய் போட்ட ரகசிய உத்தரவு….!! 

Estimated read time 0 min read

தமிழக முதலமைச்சராகவும் தவெக தலைவராகவும் இருக்கும் விஜய், உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழக மக்கள் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தும் ஒரு மிக பிரம்மாண்டமான மக்கள் நலத்திட்டத்திற்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நாளை உலக பட்டினி தினம் கடைப்பிடிக்கப்படுவதை ஒட்டி, தமிழ்நாட்டில் உள்ள ஏழை எளிய மக்களின் பசிப்பிணியைப் போக்கும் உன்னத நோக்கில் இந்த மாபெரும் மக்கள் நலப்பணியை மேற்கொள்ள தவெக மாவட்ட செயலாளர்களுக்கு அவர் அவசர உத்தரவு பிறப்பித்துள்ளார். முதல்வரின் இந்த திடீர் அறிவிப்பால் தவெக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் உற்சாகம் தொற்றிக்கொண்டுள்ளது.

இந்த அதிரடி திட்டத்தின்படி, தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் தலா 2,000 முதல் 3,000 பொதுமக்களுக்கு மிக சிறப்பான முறையில் “விலையில்லா மதிய உணவு” மற்றும் விருந்து வழங்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை எந்தவித தொய்வும் இன்றி மிக பிரம்மாண்டமாக செய்ய வேண்டும் என தவெக மாவட்ட செயலாளர்களுக்கு முதல்வர் விஜய் கறாரான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகும் ஏழை எளிய மக்களின் அடிப்படைத் தேவையை உணர்ந்து விஜய் எடுத்துள்ள இந்த ‘மெகா’ அதிரடி முடிவு, தமிழக அரசியல் களத்தில் தற்போதைய மிக ஹாட் டாபிக்காக மாறி விவாதப் பொருளாகியுள்ளது.

You May Also Like

More From Author