தமிழகத்தின் முக்கிய கோயில்களில் புதிய தரிசன முறை  

Estimated read time 1 min read

தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற திருக்கோயில்களில் விசேஷ நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களில் பக்தர்களின் கூட்டம் அலைமோதி வருகிறது.
இதனால், பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் நின்று சிரமப்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு, முதற்கட்டமாகச் சோதனை அடிப்படையில் ‘நேர ஒதுக்கீட்டு தரிசன முறையை’ அமல்படுத்த இந்து சமய அறநிலையத்துறை மிக முக்கியமான நடவடிக்கையை எடுத்துள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில், துறையின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த உயர்மட்ட ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தலைமை தாங்கினார்.
இதில் துறையின் செயலர் ஜெ.குமரகுருபரன், ஆணையர் பி.என்.ஸ்ரீதர் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு புதிய தரிசன மேலாண்மை குறித்து விரிவாக விவாதித்தனர்.

You May Also Like

More From Author