டில்லி செங்கோட்டைக்கு வெடிகுண்டு மிரட்டல்..!

Estimated read time 0 min read

மும்பை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் ஒருவர் போன் செய்து, டில்லி செங்கோட்டையை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாக மிரட்டல் விடுத்தார். மும்பை போலீசார் உடனடியாக

இந்த தகவலை டில்லி போலீசாருக்கு தெரிவித்தனர். இதன் பிறகு வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்களுடன் செங்கோட்டை வளாகம் முழுவதும் டில்லி போலீசார் தீவிர சோதனை நடத்தினர். சந்தேகத்திற்கிடமான பொருட்கள் எதுவும் கிடைக்காததால், இது ஒரு வதந்தி என போலீசார் தெரிவித்தனர்.

மிரட்டல் விடுத்த மர்மநபர் குறித்து போலீசார் தீவிர விசாரிக்கின்றனர்.

You May Also Like

More From Author