டாஸ்மாக் கடைகளுக்குப் பூட்டு போட அண்ணாமலை காட்டும் புது வழி!

Estimated read time 1 min read

பா.ஜ.க. முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ள கருத்து:

“சென்னை நகரின் சில பகுதிகளில் மேற்கொண்ட கள ஆய்வின்படி, பல டாஸ்மாக் மதுக்கடைகள், பள்ளிகள், வழிபாட்டுத்தலங்கள், பேருந்து நிலையங்களிலிருந்து 500 மீட்டர் தொலைவுக்குள்ளாகவே இயங்கி வருகின்றன.

தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும், இது போன்று பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் இயங்கும் டாஸ்மாக் கடைகளை மூட, மக்கள் நேரடியாகவோ, அல்லது ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் மூலமாகவோ, மாவட்ட ஆட்சியாளரிடம் மனு கொடுக்க வேண்டும். மது அரக்கனை ஒழிக்க ஒன்றிணைந்து தமிழ்நாட்டைக் காப்போம்.” என்று அண்ணாமலை கூறியுள்ளார்.

You May Also Like

More From Author