திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் இறால் பதப்படுத்தும் ஆலையில் அம்மோனியம் வாயு கசிவு ஏற்பட்டதில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7ஆக அதிகரித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில், திடீரென ஏற்பட்ட அமோனியா நச்சு வாயு கசிவு காரணமாக நாற்பதுக்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளனர். 74க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அடுத்தடுத்து மயக்கம் அடைந்தனர். பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெற்றுவந்த, பெண் ஒருவர் முதலில் உயிரிழந்த நிலையில், தற்போது ஆலையில் ஏற்பட்ட அம்மோனியா வாயு கசிவு காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில் மேலும் 8 பேர் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், அவர்களில் 4 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
