28ஆவது ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் விருதுகள் வெளியீடு

Estimated read time 1 min read

28ஆவது ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவின் தங்க கோப்பை விருதுகள் 20ஆம் நாளிரவு ஷாங்காய் மாநகரில் வெளியிடப்பட்டன. சீனாவின் திரைப்படமான அட்லாண்டிக் ராப்சொடி(Atlantic rhapsody), சிறந்த திரைப்படம், சிறந்த ஒளிப்பதிவு ஆகிய இரு விருதுகளை வென்றது. பெய்ஜியம் நாட்டின் இலுமினாடா(Iluminada)  எனும் திரைப்படம் நடுவர் குழுவின் சிறந்த விருதைப் பெற்றது.

நடப்பு திரைப்பட விழாவில் தங்க கோப்பை விருதுக்கான 5 பிரிவுகளின் போட்டிகளில் 49 திரைப்படங்கள் பட்டியலிடப்பட்டன. ஆசிய புதிய திறமைசாலி பிரிவில், தாய்லாந்து, இந்தியா, வங்கதேசம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த புதிய நடிகர்களும் திரைப்படங்களும் விருதுகளைப் பெற்றுள்ளனர்.

ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழா சீனாவின் ஒரே ஒரு சர்வதேச ஏ தர திரைப்பட விழாவாகும். இவ்வாண்டின் திரைப்பட விழாவில், தங்க கோப்பை திரைப்பட மன்றக் கூட்டம், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை திரைப்பட வாரம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நடப்பு விழாவுக்கான திரையிடல் நிகழ்ச்சி ஜுன் 28ஆம் நாள் வரை நடைபெறுகிறது.

You May Also Like

More From Author