அமெரிக்கா-ஈரான் இடையே 60 நாட்களில் இறுதி அமைதி ஒப்பந்தம்:சுவிஸ் மாநாட்டில் எட்டப்பட்ட உடன்படிக்கை  

Estimated read time 1 min read

மத்திய கிழக்கு பிராந்திய மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில், ‘இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்’ கீழ் சுவிட்சர்லாந்தின் பர்கென்ஸ்டாக் நகரில் நடைபெற்ற அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான உயர்மட்ட அமைதி பேச்சுவார்த்தையின் முதற்கட்ட அமர்வு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.
லூசெர்ன் ஏரி பகுதியில் நடைபெற்ற இந்த உச்சி மாநாடு மிகவும் “நேர்மறையான மற்றும் ஆக்கப்பூர்வமான சூழலில்” நடைபெற்றதாக இரு நாடுகளும் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அமைதி பேச்சுவார்த்தைக்கு கத்தார் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் அதிகாரப்பூர்வ மத்தியஸ்தர்களாக செயல்பட்டன.

You May Also Like

More From Author