தற்காப்பு வெள்ளையறிக்கையில் ஜப்பானின் பேராசை

Estimated read time 0 min read

ஜப்பான் அண்மையில் வெளியிட்ட 2026ம் ஆண்டு தற்காப்பு வெள்ளையறிக்கை அட்டைப்படத்தில் காமிக் பாணியில், புன்னகையுடன் கூடிய குடும்பம் மற்றும் பளபளக்கும் நகரம் வெளிக்காட்டப்பட்டுள்ளன. ஆனால் அதன் உள்ளே பொய்யான கூற்றுகளும் இராணுவ விரிவாக்கப் போக்கும் காண்பிக்கப்பட்டுள்ளன. இது, 2வது உலகப் போருக்குப் பிந்தைய அமைதி முறைமையின் கட்டுப்பாட்டிலிருந்து விலகி, மறு இராணுவமயமாக்கத்தையும் ஜப்பான் முன்னெடுத்து வருவதைக் காட்டுகின்றது.

புதிய வெள்ளையறிக்கை மீண்டும் சீனாவின் மீது அவதூறு பரப்பியுள்ளது. சீனா மீதான ஆத்திரமூட்டலைப் பல துறை சார்ந்தும் விரிவாக்கி, சொந்தமான பாதுகாப்பு நெடுநோக்கு முறைமையை ஜப்பான் புனரமைக்கவுள்ளது என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

சீனாவின் தைவான் விவகாரங்களில் தலையிடும் ஜப்பானின் முயற்சி, இந்த வெள்ளையறிக்கையில் சேர்க்கப்பட்டது குறித்து விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம். இது, சீன உள்விவகாரங்களில் மோசமாகத் தலையிடும் செயலாகக் கருதப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையில் ஜப்பான், மறு இராணுவமயமாக்கத்தை முன்னெடுப்பதற்கு உள்நாட்டு ஊடகங்களும் தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளன.

ஜப்பான் சீனாவின் மீது பரப்பிய அவதூற்றுக்குச் சீனா மனநிறைவின்மையையும் கடும் எதிர்ப்பையும் தெரிவித்துள்ளது. அது போன்றே தென்கொரிய வெளியுறவு அமைச்சகமும், இந்த வெள்ளையறிக்கையிலான தொடர்புடைய அம்சங்களுக்குக் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது.

You May Also Like

More From Author