சிட்னியில் மற்றுமொரு அதிர்ச்சி சம்பவம்; தேவாலயத்தில் கத்தி குத்து, பலர் காயம்

ஆஸ்திரேலியாவின் சிட்னி வெஸ்டில் அமைந்துள்ள வேக்லியில் உள்ள தேவாலயத்தில் ஒரு பிரசங்கத்தின் போது தேவாலயத்தின் பிஷப் மற்றும் பலர் கத்தியால் குத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவம், திங்கள் மாலை நடைபெற்றதாக சிட்னி காவல்துறையினர் உறுதிப்படுத்தியதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
இதில் மேலும் அதிர்ச்சிகரமான விஷயம் என்னவென்றால், இந்த பிரசங்கம் லைவ் ஸ்ட்ரீம் செய்யப்பட்டிருந்த நேரத்தில் இந்த கத்தி குத்தும் நடைபெற்றுள்ளது.
இந்த தாக்குதலை பலர் நேரலையில் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தாக்குதலுக்கான காரணத்தை அறிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், காவல்துறையினர் தற்போது அவரிடம் விசாரணை நடத்தி வருவதாகவும் ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
தாக்குதலில் காயம் அடைந்தவர்கள் அனைவரும் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

You May Also Like

More From Author