பிரான்ஸ் அரசுத் தலைவர் இம்மானுவேல் மக்ரோனின் அழைப்பின் பேரில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 2024ஆம் ஆண்டின் மே 5ஆம் நாள் முதல் 7ஆம் நாள் வரை பிரான்ஸில் பயணம் மேற்கொண்டார்.
மத்திய கிழக்கு பிரதேச நிலைமை குறித்து இரு நாட்டு அரசுத் தலைவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டு கூட்டறிக்கையை வெளியிட்டனர். இந்த அறிக்கையில் ஐ.நா.பாதுகாப்பவையின் நிரந்தர உறுப்பு நாடுகளான சீனாவும் பிரான்ஸும் சர்வதேச சட்டத்தின் அடிப்படையில் ஆக்கபூர்வமான தீர்வுகளைத் தேட கூட்டாகப் பாடுபடும்.
சர்வதேச மனிதாபிமான சட்டத்தை மீறிய அனைத்து நடவடிக்கைகளுக்குச் சீனாவும் பிரான்ஸும் கூட்டாகக் கண்டனம் தெரிவிக்கின்றன. உடனடியாக நிலையான போர்நிறுத்தத்தை நனவாக்குவது அவசியம் என்று இருநாட்டு அரசுத் தலைவர்கள் வலியுறுத்தினர்.
பல்வேறு தரப்புகள் பதற்றங்களை அதிகரிக்கக்கூடிய ஒரு சார்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதைத் தவிர்க்குமாறு அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர். சர்வதேச சட்டத்தை மீறி குடியேற்றங்களை உருவாக்கும் இஸ்ரேலின் கொள்கைக்கு அவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
பிராந்திய நிலைமை தீவிரவாக்கும் அபாயம் குறித்து அவர்கள் ஆழ்ந்த கவனம் செலுத்தி வருகின்றனர். பல்வேறு தரப்புகள் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்குமாறு அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர். அரசியல் மற்றும் தூதாண்மை நடவடிக்கையின் மூலம் ஈரான் அணு ஆற்றல் பிரச்சினையின் தீர்வை மேம்படுத்த சீனாவும் பிரான்ஸும் பாடுபடும்.
2024ஆம் ஆண்டில் கோடைகால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி மற்றும் பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் போது ஒலிம்பிக் போர் நிறுத்தத்தைப் பின்பற்றுமாறு அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.