அமெரிக்க நாடாளுமன்றத்தில் அதிபர் டிரம்ப்பிற்கு பின்னடைவு

Estimated read time 0 min read

ஈரான் மீதான அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகளை நாடாளுமன்றத்தின் அனுமதியின்றி மேற்கொள்வதை கட்டுப்படுத்தும் முக்கிய போர் அதிகாரத் தீர்மானம், அந்நாட்டின் செனட் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்த சொந்தக் கட்சியின் எம்பிக்களை “தோல்வியடைந்தவர்கள்” என்றும் விமர்சித்துள்ளார்.
இந்த தீர்மானம் நிறைவேறியதை தொடர்ந்து, தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ள அதிபர் டிரம்ப், “ஈரான் தற்பொழுது முற்றிலும் பலவீனமடைந்து, அமெரிக்காவிற்கும் அதன் அதிபரான எனக்கும் கட்டுப்பட்டு, கேட்கும் சலுகைகளை வழங்கத் தயாராக இருக்கும் வேளையில், செனட் சபை இந்த தேவையற்ற போர்க் கால அதிகாரத் தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளது” என்று சாடியுள்ளார்.

You May Also Like

More From Author