பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்திற்கு உட்பட்ட கெச் மாவட்டத்தின் புலெடா பகுதியில், வீரர்களின் ராணுவ பாதுகாப்பு வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது.
அப்போது அப்பகுதியில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் சிலர் சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்றை பயன்படுத்தி ராணுவ வாகனத்தை வெடிக்க செய்தனர்.
இந்த தீவிரவாத தாக்குதலுக்கு இலக்கான அந்த வாகனத்தில் இருந்த ராணுவ வீரர்கள் 5 பேர் உயிரிழந்தனர்.