2026ஆம் ஆண்டு உலகச் செயற்கை நுண்ணறிவு மாநாடு பற்றி அறிக்கை வெளியீடு

Estimated read time 1 min read

2026ஆம் ஆண்டு உலகச் செயற்கை நுண்ணறிவு மாநாடு மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆட்சிமுறை பற்றிய உலகளாவிய உயர்நிலைக் கூட்டம் ஜூலை 17ஆம் நாள் ஷாங்காய் மாநகரில் துவங்கியது.

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் துவக்க விழாவில் முக்கிய உரை நிகழ்த்தினார். இம்மாநாட்டில் கசகஸ்தான் அரசுத் தலைவர் டோகாயேவ், கம்போடியத் தலைமையமைச்சர் ஹன் மானெட், தாய்லாந்து தலைமையமைச்சர் அனுடின் சார்ன்விரகுல், ஐ.நா தலைமைச் செயலாளர் அன்டோனியோ குட்ரேஸ் ஆகியோரும், 100க்கும் மேலான நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும், தொழில், கல்வி மற்றும் ஆராய்ச்சித் துறையினர்களும் கலந்து கொண்டனர்.

“அறிவார்ந்த கூட்டாளிகளும் எதிர்காலத்திற்கான கூட்டு உருவாக்கமும்”என்பது, நடப்பு மாநாட்டின் கருப்பொருளாகும். உலகளாவிய செயற்கை நுண்ணறிவு அனைவருக்கும் நன்மை புரிவதற்காக முன்னேறுவது பற்றி இம்மாநாட்டில் விவாதம் நடத்தப்படும்.

மனிதப் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியின் அமைப்புமுறையைச் செயற்கை நுண்ணறிவு பன்முகங்களிலும் மறுசீரமைத்து, மனித நாகரிகத்தின் முன்னேற்றத்தில் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தும் என்று இம்மாநாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், செயற்கை நுண்ணறிவு, உலக ஆட்சிமுறையின் புதிய ஆய்வுத் தலைப்பாகும். “உலகளாவிய ஒற்றுமை மற்றும் பரஸ்பர ஆதரவு” என்ற எழுச்சியைப் பின்பற்றி, செயற்கை நுண்ணறிவுக்கான சர்வதேச ஒருங்கிணைப்பின் மூலம், உலக ஆட்சிமுறைக்குப் புதிய முன்மாதிரியை உருவாக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

You May Also Like

More From Author