திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதார பதியில் ஆடித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

Estimated read time 1 min read

திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதார பதியில் ஆடித் திருவிழா, கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதார பதியில், ஆடித் திருவிழாவையொட்டி அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் பணிவிடைகள் நடைபெற்றன.

தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட கொடி பட்டம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 11 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில், தினமும் சிறப்பு வழிபாடுகள், அன்னதானம் மற்றும் வாகன பவனிகள் நடைபெற உள்ளன. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும் 27-ம் தேதி நடைபெறவுள்ளது.

You May Also Like

More From Author