சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும், அரசுத் தலைவரும், மத்திய இராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷி ச்சின்பிங், பிரதிநிதிக் குழுவுக்குத் தலைமைத் தாங்கி, செப்டம்பர் 23ஆம் நாள் சிறப்பு விமானத்தின் மூலம் சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தின் உருமுச்சி நகரைச் சென்றடைந்தார்.
சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்டதன் 70ஆவது ஆண்டு நிறைவுக்கான கொண்டாட்ட நிகழ்வுகளில் அவர் பங்கெடுக்கவுள்ளார்.
இது குறித்து, சின்ஜியாங்கின் பல்வேறு தேசிய இன மக்களும், பல்வேறு துறையினரும் மகிழ்ச்சி மற்றும் ஊக்கம் அடைந்துள்ளனர்.
