சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் சிறப்பு பிரதிநிதியும், சீன அரசவைத் துணை தலைமை அமைச்சருமான ட்சாங் குவோஜிங் பிப்ரவரி 10ஆம் நாள் பாரிஸில் செயற்கை நுண்ணறிவு செயல்பாட்டு உச்சிமாநாட்டில் கலந்து கொண்டு உரைநிகழ்த்தினார்.
அவர் கூறுகையில், செயற்கை நுண்ணறிவு புதிய சுற்று அறிவியல் தொழில்நுட்ப புரட்சி மற்றும் தொழில்துறை புரட்சியின் முக்கிய உந்து சக்தியாக மாறியுள்ளது. 2023ஆம் ஆண்டு சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், உலக செயற்கை நுண்ணறிவு நிர்வாக முன்மொழிவை முன்வைத்தார்.
செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியிலுள்ள வாய்ப்பு மற்றும் அறைகூவலை எதிர்கொண்டுள்ள சர்வதேச சமூகம் கைகோர்த்து செயல்பட வேண்டும் என்று ட்சாங் குவோஜிங் தெரிவித்தார்.
உலகின் 30க்கும் அதிகமான நாடுகளின் அரசுத் தலைவர்கள், உயர் அதிகாரிகள் அல்லது உயர் நிலைப் பிரதிநிதிகள், சர்வதேச அமைப்புகளின் பொறுப்பாளர்கள் முதலியோர் நடப்பு உச்சிமாட்டில் கலந்து கொண்டனர்.
அனைத்தையும் உள்ளடக்கிய தொடரவல்ல செயற்கை நுண்ணறிவை வளர்த்து மனிதர் மற்றும் புவிக்குப் பலனளிப்பது பற்றிய அறிக்கையை அவர்கள் கூட்டாக வெளியிட்டனர்.