டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு தேதி மாற்றம்! அதிகாரப்பூர்வ புதிய தேதி மற்றும் பணியிடங்கள் எண்ணிக்கை – முழு விபரம்  

Estimated read time 1 min read

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-1 (குரூப்-1) முதல்நிலைத் தேர்வு தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, இந்த முதல்நிலைத் தேர்வானது வருகிற செப்டம்பர் 6, 2026 அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், தற்பொழுது தேர்வாணையம் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி, இந்தத் தேர்வானது செப்டம்பர் 27, 2026 அன்று நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தேதி மாற்றத்திற்கான தெளிவான காரணங்கள் எதையும் தேர்வாணையம் குறிப்பிடவில்லை என்றாலும், தேர்வுக்குத் தயாராகும் தேர்வர்களுக்குக் கூடுதலாகச் சுமார் 20 நாட்கள் அவகாசம் கிடைத்துள்ளது.

You May Also Like

More From Author