2036 ஒலிம்பிக்கை இந்தியா நடத்தும்! சுதந்திர தின உரையில் பிரம்மாண்ட திறமை தேடல் திட்டத்தை அறிவித்த பிரதமர் மோடி  

Estimated read time 0 min read

நாட்டின் 80வது சுதந்திர தின விழாவில் செங்கோட்டையிலிருந்து உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, விளையாட்டுத் துறையில் இந்தியா அடைய வேண்டிய முக்கிய இலக்குகளைத் தெளிவுபடுத்தினார்.
குறிப்பாக, 2036 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்துவதை ஒரு முக்கிய லட்சியமாக இந்தியா கொண்டுள்ளது என அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
மேலும், சர்வதேச விளையாட்டு அரங்கில் இந்தியாவின் நிலையை உயர்த்துவதற்கும், உலகத் தரம் வாய்ந்த விளையாட்டு வீரர்களை உருவாக்குவதற்கும் மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருவதாகப் பிரதமர் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.

You May Also Like

More From Author