இனி ரூ.10-க்கு மெட்ரோவில் போலாம்..!

Estimated read time 1 min read

பூந்தமல்லி – வடபழனி இடையிலான மஞ்சள் வழித்தட மெட்ரோ ரயில் சேவையின் கட்டண விவரம் வெளியானது.

வரும் அக்டோபர் 11-ந்தேதி பூந்தமல்லி – வடபழனி இடையிலான மெட்ரோ ரெயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்க இருப்பதாக சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரெயில் சேவை தொடக்க விழாவில், பிரதமர் மோடி, முதல்-அமைச்சர் விஜய் ஆகியோர் ஒரே மேடையில் கலந்து கொள்ள இருக்கின்றனர். பூந்தமல்லி–வடபழனி மெட்ரோ ரெயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்து, தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் உடன் இணைந்து பூந்தமல்லியில் இருந்து வடபழனி வரை மெட்ரோ ரெயிலில் பயணம் செய்ய திட்டமிடப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

14.6 கி.மீ., 14 நிலையங்கள் கொண்ட சென்னை வடபழனி-பூந்தமல்லி மஞ்சள் வழித்தடத்தில் ரயில் இயக்க ரயில்வே பாதுகாப்பு ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. பூந்தமல்லியில் இருந்து வடபழனி வரை ரூ.40, போரூர் சந்திப்பு வரை ரூ.30, காட்டுப்பாக்கம் வரை ரூ.20, பூந்தமல்லி பேருந்து நிலையம் வரை ரூ.10 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

You May Also Like

More From Author