ஆல்டோ கே10 மாடல் கார்களை திரும்பப் பெறுவதாக மாருதி சுசுகி அறிவிப்பு  

இந்தியாவின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசுகி, ஸ்டீயரிங் கியர் பாக்ஸில் உள்ள குறைபாடு காரணமாக ஆல்டோ கே10 காரின் 2,555 மாடல்களை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், “மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் 2,555 ஆல்டோ கே10 வாகனங்களை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.
அதில் ஸ்டீயரிங் கியர் பாக்ஸ் அசெம்பிளி பகுதியில் குறைபாடு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது” என்று தெரிவித்துள்ளது. மேலும், இந்த குறைபாடு வாகனத்தை இயக்கும் திறனை பாதிக்கலாம் என்றும், குறைபாடுள்ள பகுதியை மாற்றும் வரை வாகனத்தை ஓட்ட வேண்டாம் என்றும் வாடிக்கையாளர்களை எச்சரித்துள்ளது.
பாதிக்கப்பட்ட வாகன உரிமையாளர்கள் மாருதி சுசுகியின் அங்கீகரிக்கப்பட்ட டீலர்கள் மூலம் தொடர்புகொள்ளப்பட்டு, இலவசமாக சரிசெய்து தரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author