”அக்.2 முதல் நாடு தழுவிய போராட்டம்” தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிராக பாயும் இண்டியாக கூட்டணி…. கார்கே போட்ட அதிரடி பிளான்….!! 

Estimated read time 1 min read

தலைமைத் தேர்தல் ஆணையர் (CEC) ஞானேஷ்குமார் தனது பதவியை உடனடியாக ராஜினாமா செய்யக் கோரி, வரும் அக்டோபர் 2-ம் தேதி முதல் இண்டியாக (INDIA) கூட்டணி சார்பில் நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்து அதிரடியாக அறிவித்துள்ளார். தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளுக்கு எதிராகவும், ஜனநாயகத்தைக் காக்கும் நோக்கத்திலும் இந்தப் போராட்டங்கள் ஒருங்கிணைக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2-ம் தேதி முதல் அக்டோபர் 8-ம் தேதி வரை ‘ஜனநாயகத்தைக் காப்போம்’ என்ற பெயரில் நாடு முழுவதும் பல்வேறு வடிவங்களில் தொடர் போராட்டங்கள் நடைபெறும் என்று கார்கே விளக்கமளித்துள்ளார். இதன் தொடர்ச்சியாக, வரும் அக்டோபர் 6-ம் தேதி எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் (MP-க்கள்) அனைவரும் ஒன்றுதிரண்டு டெல்லியில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தை நோக்கிப் பிரம்மாண்ட பேரணியாகச் செல்லவுள்ளனர்.

மேலும், இந்தப் போராட்டத்தின் உச்சகட்டமாக வரும் நவம்பர் 1-ம் தேதி தலைநகர் டெல்லியில் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளதாகவும் மல்லிகார்ஜுன கார்கே அறிவித்துள்ளார். இண்டியாக கூட்டணியின் இந்தத் தொடர் போராட்ட அறிவிப்புகள் மற்றும் பேரணி திட்டங்கள், டெல்லி அரசியல் வட்டாரத்திலும், மத்திய அரசு தரப்பிலும் பெரும் பரபரப்பையும் சுடச்சுட விவாதங்களையும் கிளப்பியுள்ளன.

You May Also Like

More From Author