இம்ரான் கான் மருத்துவ பரிசோதனை முடிந்து மீண்டும் அடியாலா சிறைக்கு மாற்றம்: பாகிஸ்தானில் பரபரப்பு  

Estimated read time 0 min read

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், இஸ்லாமாபாத்தில் உள்ள ஷிஃபா சர்வதேச மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனைகளுக்கு பிறகு, மீண்டும் அடியாலா சிறைக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டார் என இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.
73 வயதான இம்ரான் கானுக்கு சிறையில் போதிய மருத்துவ உதவி வழங்கப்படவில்லை எனத் தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில், அவரை பிரத்யேக மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துமாறு பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்பேரில், நள்ளிரவில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவருக்கு ஆறு மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழு தீவிர பரிசோதனைகளை மேற்கொண்டது.
பரிசோதனையின் முடிவில், அவர் சிறைக்காவலில் தொடர்வது பாதுகாப்பானதுதான் என மருத்துவர்கள் உறுதிசெய்ததை அடுத்து, அவர் மீண்டும் சிறைக்கு மாற்றப்பட்டார்.

You May Also Like

More From Author