சீனாவில் புதிய ரக மின்கலத் துறையின் வளர்ச்சித் திட்டம்

Estimated read time 1 min read

புதிய ரக மின்கலத் துறையின் வளர்ச்சி பற்றிய 15ஆவது ஐந்தாண்டு திட்டத்தை சீனத் தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்  உள்ளிட்ட 7 வாரியங்கள் அண்மையில் கூட்டாக வெளியிட்டன. இதில் முழுமையான சங்கிலியின் புத்தக்கம் மற்றும் மேம்பாடு ஆகியவை முக்கியத்துவம் அளிக்கப்பட்டன.

பாதுகாப்பான லித்தியம் மின்கலங்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்று இத்திட்டத்தில் முன்வைக்கப்பட்டது. அதன்படி, புதிய எரியாற்றல் வாகனங்கள் மற்றும் மின்சார கப்பல்களுக்காக பாதுகாப்புத் தன்மை, வேகமான மின்னாற்றல் ஏற்றும் தன்மை, கடுங்குளிரைத் தாங்கக் கூடிய தன்மை, குறைய எடையுடன் போதிய திறன் ஆகியவற்றைக் கொண்ட நீண்ட காலமாகப் பயன்படுத்தப்படக் கூடிய எரிசக்தி-சேமிப்பு மின்கலங்களை வளர்க்க வேண்டும். அதேவேளையில்,   சோடியம் மின்கலங்களின் உற்பத்திச் செலவு, பாதுகாப்பு மற்றும் மூலப்பொருள் உத்தரவாத மேம்பாட்டை முழுமையாக வெளிப்படுத்த சீனா முயற்சி மேற்கொள்ளும்.

You May Also Like

More From Author