சுவிட்சர்லாந்து தேசியப் பேரவையின் தலைவர் ரினிகெர் மற்றும் சுவிட்சர்லாந்து மாநிலங்கள் அவையின் தலைவர் காரோனி ஆகியோரின் அழைப்பையேற்று, சீனத் தேசிய மக்கள் பேரவை நிரந்தர கமிட்டித் தலைவர் சாவ்லெஜி ஜூலை 28முதல் 31ஆம் நாள் வரை சுவிட்சர்லாந்தில் நட்புப் பயணம் மேற்கொண்டார்.
சுவிட்சர்லாந்துடன் இணைந்து இரு நாட்டுத் தலைவர்களின் முக்கிய ஒத்தக் கருத்துக்களை நல்ல முறையில் நடைமுறைப்படுத்தி இரு நாட்டின் புத்தாக்கத்துடன் கூடிய நெடுநோக்குக் கூட்டாளியுறவைப் புதிய நிலைக்குக் கொண்டு வருவதை கூட்டாக முன்னேற்றச் சீனா விரும்புகிறது என்று அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய போது, சாவ்லெஜி கூறினார்.
சுவிட்சர்லாந்து தேசியப் பேரவையானது, சீனாவுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்தி தொடரவல்ல வளர்ச்சிக்கு ஆக்கப்பூர்வமான பங்களிப்பை ஆற்ற விரும்புவதாக ரினிகெர் தெரிவித்தார்.
மேலும், சீனாவுடனான ஒத்துழைப்பு சுவிட்சர்லாந்துக்கு நெடுநோக்கு முக்கியத்துவம் வாய்ந்துள்ளது. சுவிட்சர்லாந்து மாநிலங்கள் அவை சீனாவுடன் பரிமாற்றம் மற்றும் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து வலுப்படுத்தி பரஸ்பர புரிந்துணைர்வை அதிகரித்து கூட்டு வளர்ச்சியை முன்னேற்ற விரும்புவதாகக் காரோனி கூறினார்.