தேசிய தின விடுமுறையில் சீராக இயங்கும் நுகர்வு சந்தை

சீனாவின் தேசிய விடுமுறை காலத்தின் முதல் பாதியில் நாட்டின் நுகர்வு சந்தை சீராகவும் ஒழுங்காகவும் இயங்கி வருவதாகவும், பல்வேறு இடங்களிலும் வாழ்க்கைக்குத் தேவையான தயாரிப்புகளின் சந்தை விநியோகம் போதுமானதாக இருந்ததுடன், விலைகளும் நிலையாக இருந்தன என்றும் சீன வணிக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வணிகப் பெருந்தரவுகளின்படி, அக்டோபரின் முதல் மூன்று நாட்களில், முக்கியமாகக் கண்காணிக்கப்படும் 78 வணிக பகுதிகளில் பயணிகளின் எண்ணிக்கை மற்றும் இயக்க வருவாய், கடந்த ஆண்டை விட முறையே 3.4 சதவீதம் மற்றும் 5.3 சதவீதம் அதிகரித்துள்ளன. பழைய பொருட்களைக் கொடுத்து புதியவையாக மாறுவதன் விற்பனை மதிப்பு 1963 கோடி யுவானை எட்டியது. இதன் மூலம் 34 லட்சத்து 83 ஆயிரம் நுகர்வோர் பயனடைந்தனர்.

மேலும், இவ்விடுமுறையில் காய்கறி மற்றும் கோழி இறைச்சியின் விலைகள் விடுமுறைக்கு முந்தைய நிலையை விட 0.5 சதவீதமும், முட்டையின் விலை 1.1 சதவீதமும் குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author