ரஷ்யாவின் கடற்படை வலிமையை அதிகரிக்கும் விதமாக, சக்தி வாய்ந்த அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலான Khabarovsk ஐ அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் ஆண்ட்ரே பெலூசோவ் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தினார்.
இந்த நிகழ்வு தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. இது ஒரு முக்கியமான நிகழ்வு என்று அமைச்சர் பெலூசோவ் கூறினார்.
இந்த நீர்மூழ்கிக் கப்பல், இந்தியாவின் விமானம் தாங்கிக் கப்பலான ஐஎன்எஸ் விக்ரமாதித்யாவைச் சீரமைத்த புகழ்பெற்ற செவ்மாஷ் கப்பல் கட்டும் தளத்தில் இருந்து அறிமுகப்படுத்தப்பட்டது.
ரூபின் வடிவமைப்புப் பணியகம் வடிவமைத்த Khabarovsk நீர்மூழ்கிக் கப்பல், ரஷ்யாவின் கடல் எல்லைகள் மற்றும் நலன்களைப் பாதுகாக்க நவீன நீருக்கடி ஆயுதங்கள் மற்றும் ரோபோ அமைப்புகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் அதிசக்தி வாய்ந்த அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் அறிமுகம்
