பிலிப்பைன்ஸின் ஆத்திரமூட்டலுக்கு சீனா எச்சரிக்கை

சீன அரசின் அனுமதியின்றி பிலிப்பைன்ஸின் சி208 விமானம் ஒன்று அக்டோபர் 3ஆம் நாள் சீனாவின் ஹுவாங்யான் தீவின் வான் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்தது. சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் தெற்குப் பிரதேச கட்டளைப் பிரிவு சட்டத்திற்கு இணங்க எச்சரிக்கை விடுத்து, அந்த விமானத்தை அங்கிருந்து வெளியேற்றியது. ஹுவாங்யான் தீவு சீனாவின் நிரந்தர உரிமை பிரதேசமாகும் என்றும், பிலிப்பைன்ஸ் உடனடியாக அத்துமீறலையும் ஆத்திரமூட்டுதலையும் நிறுத்துமாறும் சீனா கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

You May Also Like

More From Author