புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அதற்கான சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு H1N1 பன்றிக்காய்ச்சல் தொற்று ஏற்படுவது தீவிரமான உயிராபத்தை உருவாக்கக்கூடும் என மூத்த புற்றுநோய் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
கீமோதெரபி, கதிர்வீச்சு சிகிச்சை, ஸ்டெம் செல் மாற்று சிகிச்சை மற்றும் ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு மண்டலம் மிகவும் பலவீனமாக இருக்கும்.
இதனால் சாதாரண வைரஸ் தொற்றுகள் கூட இவர்களின் உடலில் தீவிரமடைந்து நுரையீரலைப் கடுமையாகப் பாதிக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாதாரண காய்ச்சல் இல்லை, உயிருக்கே ஆபத்து! புற்றுநோய் நோயாளிகளைத் தாக்கும் H1N1 பன்றிக்காய்ச்சல்; மருத்துவர்கள் தீவிர எச்சரிக்கை
