40 ஆண்டுகளுக்கு முன் சீனாவில் நிதித் துறை சீர்திருத்தத்தை ஆராய்ந்து முன்னெடுக்க ஷிச்சின்பிங் முயற்சித்தார். நிதியின் சாராம்சம் என்பது, பொது மக்களுக்கு நலன் தந்து, உண்மை பொருளாதாரத்துக்குச் சேவை புரிவதாகும். இது தான், சீன பாணியுடைய நிதித் துறையின் அடிப்படையாகும் என்று அவர் கருதினார்.
பொருளாதாரம், உடல் போன்றது. நிதி, இரத்தத் தொடர் போன்றது என்ற ஷிச்சின்பிங் ஒப்பீட்டுக் கூற்று, இவ்விரு தரப்புகளின் நெருங்கிய தொடர்பைக் குறிக்கிறது. மேலை நாடுகளின் நிதியுடன் வேறுப்பட்ட சீனாவின் நிதியின் சிறப்பை இதுவும் காட்டியது. உண்மை பொருளாதாரத்துக்குச் சேவை புரிவது, நிதித் துறையின் சாராம்சமாகும்.
2023ம் ஆண்டில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் முதலாவது நிதிப் பணிக் கூட்டம் நடைபெற்றது. அதில் அறிவியல் தொழில் நுட்பம், பசுமை, பொது நலன், முதியோர் சேவை, எண்ணியல் நிதி ஆகிய 5 துறைகளின் பணிகளைச் சிறப்பாக புரிந்து, சீன பாணியுடைய நிதித் துறை வளர்ச்சி பாதைக்கான இலக்கை அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் வகுத்துள்ளார்.