ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை, கிளி, பரிவட்டம் உள்ளிட்டவை திருப்பதி பிரம்மோற்சவ விழாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டன.
திருப்பதியில் பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான கருட சேவை வரும் 19ம் தேதி நடைபெறுகிறது.
https://youtu.be/D9gd-zrRPI4?is=HfVkcKVgGI7QJU3L
கருடசேவையின்போது மோகினி அலங்காரத்தில் காட்சியளிக்கும் மலையப்ப சுவாமிக்கு சாற்றுவதற்காக, ஸ்ரீ ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை, கிளி, பரிவட்டம் போன்றவை திருப்பதிக்கு காரில் கொண்டு செல்லப்பட்டன. இதையொட்டி ஸ்ரீ ஆண்டாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.
திருப்பதியில் கருட சேவைக்கு முன்னதாக, நாளை தோமாலை சேவையில் மூலவருக்கு ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை, கிளி உள்ளிட்டவை சாற்றப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
