ஸ்டேட் போர்டு பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது: 95.03% தேர்ச்சி விகிதம்  

Estimated read time 1 min read

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத் தேர்வுகளின் முடிவுகள் இன்று, மே 8 காலை 9 மணிக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்.
மாநில பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளில், மார்ச் 3 முதல் 25 ஆம் தேதி வரை நடைபெற்ற பொதுத்தேர்வுகளில் 8.21 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர்.
அவர்களுள், தேர்வு முடிவுகளின் படி, தமிழகத்தில் மொத்தம் 95.03% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை கீழ்காணும் இணையதளங்களில் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம்:
https://results.digilocker.gov.in
https://results.digilocker.gov.in
www.tnresults.nic.in
http://www.tnresults.nic.in.
மேலும், மாணவர்கள் தங்கள் பள்ளிகள், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், தேசிய தகவல் மையங்கள் மற்றும் அனைத்து அரசு நூலகங்களிலும் கட்டணமின்றி முடிவுகளை பார்க்கலாம்.

Please follow and like us:

You May Also Like

More From Author