நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!

Estimated read time 0 min read

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை பாரம்பரிய உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடப்பட்டு வருகிறது.

தீமையை நன்மை வென்றதன் அடையாளமாக நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, வீடுகள், கோயில்கள் மற்றும் பொது இடங்கள் வண்ண விளக்குகள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

செல்வத்தின் அதிபதியான மகாலட்சுமியை வழிபட்டு பொதுமக்கள் தீபாவளியைக் கொண்டாடி வருகின்றனர்.

அதிகாலையில் எழுந்து எண்ணெய் குளியல் முடிந்ததும் புத்தாடை அணிந்து ஒருவருக்கொருவர் இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தனர். தீபாவளி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டதுடன் பட்டாசுகள் வெடித்தும் உற்சாகக் கொண்டாட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author