100-வது வயதில் அடியெடுத்து வைக்கும் பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி – பிரதமர் மோடி வாழ்த்து!

Estimated read time 1 min read

100 வயதில் அடியெடுத்து வைக்கும் பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவத்துள்ளார்.

அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், இன்று, நவம்பர் 8-ஆம் தேதி, ஒரு முக்கியமான நாளாகும். மதிப்பிற்குரிய எல். கே. அத்வானி தனது நூறாவது வயதில் அடியெடுத்து வைக்கிறார். இந்தச் சிறப்பான தருணத்தில், அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

இந்தியாவிற்கு அவர் ஆற்றிய அழியாத பங்களிப்பைப் போற்றும் வகையில் ஒரு கட்டுரை எழுதியுள்ளேன்.

அவரது வாழ்வின் பல்வேறு கட்டங்களை அதில் நினைவு கூர்ந்துள்ளேன்; பிரிவினையின் கொடூரங்களை அனுபவித்தது முதல், மீண்டும் வாழ்க்கையை முதலிலிருந்து கட்டமைத்தது, ஜன சங்கத்தை வலுப்படுத்தியது மற்றும் பாரதிய ஜனதா கட்சியை உருவாக்கியது குறிப்பிட்டுள்ளேன்.

அவசரநிலை காலத்தில் ஜனநாயகத்திற்காகக் குரல் கொடுத்தது, சோமநாத்திலிருந்து அயோத்தி வரை ‘ரத யாத்திரை’யை முன்னெடுத்தது, மற்றும் அரசாங்கத்தில் இருந்து நாட்டிற்குச் சேவை செய்தது என அனைத்தையும் அதில் குறிப்பிட்டுள்ளேன்.

மேலும், அத்வானி அவர்களின் பிற பரிமாணங்கள் குறித்தும் எழுதியுள்ளேன் – அவர் ஒரு தீவிர வாசகர், கலை மற்றும் திரைப்படங்களின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author