சத்தீஸ்கரில் என்கவுன்டரில் 7 மாவோயிஸ்டுகள் பலி

சத்தீஸ்கரின் நாராயண்பூர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் இன்று நடைபெற்ற என்கவுன்டரில் இரண்டு பெண் உறுப்பினர்கள் உட்பட குறைந்தது ஏழு மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

என்கவுண்டர் நடந்த இடத்தில் இருந்து ஏகே 47 உட்பட ஏராளமான ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
மாவட்ட ரிசர்வ் காவலர் (டிஆர்ஜி) மற்றும் சிறப்பு அதிரடிப் படை (எஸ்டிஎஃப்) ஆகியவற்றின் கூட்டு பாதுகாப்புக் குழுவிற்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே இன்று காலை 6 மணியளவில் ஒரு காட்டில்சண்டை நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாராயண்பூர் மற்றும் கான்கேர் எல்லைப் பகுதியின் அபுஜ்மரில் மாவோயிஸ்ட் என்கவுன்டருக்காக பாதுகாப்புப் படையினர் திங்கள்கிழமை புறப்பட்டனர்.

You May Also Like

More From Author