அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியா மீது வரிகளை விதிப்பதன் மூலம், இந்தியாவை சீனாவுடன் நெருக்கமான உறவுக்குத் தள்ளுவதாக, முன்னாள் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் குற்றம் சாட்டியுள்ளார்.
டிரம்பின் இந்த வரிக் கொள்கைகளை நியாயமற்றது என்று அவர் விமர்சித்துள்ளார்.
டிரம்பின் இத்தகைய நடவடிக்கைகள் காரணமாக, அமெரிக்காவின் நட்பு நாடுகள் உட்பட, பல நாடுகள் அமெரிக்காவை நம்ப முடியாத ஒரு நாடாக பார்க்கத் தொடங்கியுள்ளதாகவும் சல்லிவன் கூறினார்.
முன்னாள் அதிபர் ஜோ பைடனின் பதவிக்காலத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த ஜேக் சல்லிவன், தி பல்வார்க் பாட்காஸ்டிற்கு அளித்த பேட்டியில் இந்த கருத்துகளைத் தெரிவித்தார்.
இந்தியா-சீனா உறவு குறித்து அமெரிக்காவின் முன்னாள் NSA கருத்து
