கௌரவ விரிவுரையாளர்களுக்கு நவம்பர் முதல் தொகுப்பூதியம் ரூ.5,000 உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல், கல்வியியல், பொறியியல் மற்றும் பல்வகைத் தொழில்நுட்பக் கல்லூரிகளில் தற்காலிகமாகப் பணியாற்றும் 9,646 கௌரவ விரிவுரையாளர்களுக்கு மாதாந்திரத் தொகுப்பூதியத்தை ரூ.5,000 உயர்த்தி வழங்க முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, கலை, அறிவியல், கல்வியியல் மற்றும் பொறியியல் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்களின் ஊதியம் ரூ.30,000-லிருந்து ரூ.35,000 ஆகவும், பல்வகைத் தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர்களின் ஊதியம் ரூ.25,000-லிருந்து ரூ.30,000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வு நவம்பர் 1, 2026 முதல் அமலுக்கு வருகிறது. இதனால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.24.12 கோடி கூடுதல் செலவு ஏற்படும்.
