முதலமைச்சர் விஜய் சினிமாவில் மட்டுமே ஹீரோ என்றும், நிஜ வாழ்க்கையில் வில்லன் போல் செயல்படுவதாகவும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். தவெக அமைச்சர்களில் ஒருவரின் செயல்பாடாவது பாராட்டும் வகையில் உள்ளதா? எனக் கேள்வி எழுப்பிய அவர், தகுதியற்றவர்களையும் தமிழில் பேசத் தெரியாதவர்களையும் அமைச்சர்களாக்கியுள்ளதாகக் குற்றம்சாட்டினார்.
மேலும், பிளாக்கில் டிக்கெட் விற்றவர்களாகவும் இருந்தவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளதாகவும் விமர்சித்தார்.
