சீன நவீனமயமாக்கத்தை முன்னேற்றுவது பற்றிய தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டது

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது மத்தியக் கமிட்டியின் 3வது முழு அமர்வு ஜூலை 15 முதல் 18ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது.

மத்திய கமிட்டியின் 199 உறுப்பினர்களும், 165 மாற்று உறுப்பினர்களும் இம்முழு அமர்வில் கலந்து கொண்டனர்.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழு இம்முழு அமர்வுக்குத் தலைமைத் தாங்கியது.

மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளர் ஷி ச்சின்பிங் முக்கிய உரை நிகழ்த்தினார்.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழு அளித்த பொறுப்பை ஏற்று, ஷி ச்சின்பிங் வழங்கிய பணியறிக்கை, இம்முழு அமர்வில் கேட்டறியப்பட்டு விவாதம் நடத்தப்பட்டது.

மேலும், சீர்திருத்தத்தை மேலும் பன்முகங்களிலும் ஆழமாக்கி, சீன நவீனமயமாக்கத்தை முன்னேற்றுவது பற்றிய சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

You May Also Like

More From Author