தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் 300 புதிய வழித்தடங்களில் புதிய பேருந்துகள் சேவையை முதலமைச்சர் ஜோசப் விஜய் தொடங்கி வைக்கிறார்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை 10 மணியளவில் நடைபெறும் நிகழ்வில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 300 புதிய வழித்தடங்களில் புதிய பேருந்து சேவையை தொடங்கி வைக்கிறார்.
சென்னை, மதுரை, கோவை, திருநெல்வேலி, சேலம், விழுப்புரம் மற்றும் கும்பகோணம் ஆகிய 7 அரசு போக்குவரத்துக் கழகங்களின் கீழ் இந்த புதிய வழித்தடங்களில் புதிய பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது
