டிசம்பர் 1 முதல் ரேஷனில் வரப்போகும் மாபெரும் மாற்றம்!

Estimated read time 1 min read

ரேஷன் அட்டைதாரர்கள் ரேஷன் பொருட்களை வாங்க நேரடியாக கடைக்கு வந்து விரல் ரேகை பதிவு மூலம் பொருட்களை வாங்கிச் செல்லும் நடைமுறை தற்போது பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால் தனியாக வசிக்கும் முதியவர்கள் ரேஷன் பொருட்களை வாங்குவதற்கு சிரமம் ஏற்படுகிறது.

இதனால், 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மூத்த குடிமக்களின் வீடுகளுக்கு நேரடியாக ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் 2025-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டது. கடை ஊழியர்கள் மாதத்தின் முதல் வாரத்தில், வாகனங்களில் பொருட்களை எடுத்து சென்று, வீடுகளில் வினியோகம் செய்கின்றனர்.

கடந்த அக்டோபர் மாதம் முதல், இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு, 65 வயதுக்கு மேற்பட்டவர்களின் வீடுகளுக்கு பொருட்கள் வழங்கப்படுகின்றன. மொத்தம் 19.30 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொருட்கள் வழங்கப்படுகின்றன.

இத்திட்டம் மேலும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக, தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, திருநங்கையர், கைம்பெண்கள், முன்னாள் ராணுவத்தினர் உள்பட கூடுதலாக, 2.27 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களின் வீடுகளுக்கு நேரடியாக ரேஷன் பொருட்கள் வழங்கப்பட உள்ளன. இதன் மூலம் 4.89 லட்சம் பேர் பயன்பெறுவர்.

அவர்களின் வீடுகளில் வரும் டிசம்பர் மாதம் முதல் ரேஷன் பொருட்கள் நேரடியாக வழங்கப்பட உள்ளன. இதற்காக ஆண்டுக்கு 11 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author