பழந்தமிழகத்தின் நெறியான, ‘தமிழியல்’ மீட்கப்பட்டாக வேண்டும்!

Estimated read time 1 min read
தமிழகத்தில் மன்னன் அதியமானை நெறிப்படுத்தி நெல்லிக்கனி பெற்ற ஒளவையார் போல, யாரெல்லாம் பெண்பாற் புலவர்களாக அன்றைய தமிழக அரசியலில் கோலோச்சியிருக்கிறார்கள் என்று தேடினால் மனம் நிறைவடையும் அளவிற்கு பட்டியல் நீள்கிறது.

1.அச்சியத்தை மகள் நாகையார்
2.அள்ளுரர் நன்முல்லை
3.ஆதிமந்தி
4.இளவெயினி
5.உப்பை
6.ஒக்கூர் மாசாத்தியார்
7.கரீனா கண்கணையார்
8.கவியரசி
9.கழார் கீரன் எயிற்றியார்
10.கள்ளில் ஆத்திரையனார்
11.காக்கை பாடினியார்
12.காமக்கணிப் பசலையார்
13.காரைக்காலம்மையார்
14.காவற்பெண்டு
15.காவற்பெண்டு
16.கிழார் கீரனெயிற்றியார்
17.குட புலவியனார்
18.குமிழிநாழல் நாப்பசலையார்
19.குமுழி ஞாழல் நப்பசையார்
20.குறமகள் இளவெயினி
21.குறமகள் குறிஎயினி
22.குற மகள் இளவெயினியார்
23.கூகைக்கோழியார்
24.தமிழறியும் பெருமாள்
25.தாயங்கண்ணி
26.நக்கண்ணையார்
27.நல்லிசைப் புலமை மெல்லியார்
28.நல்வெள்ளியார்
29.நெட்டிமையார்
30.நெடும்பல்லியத்தை
31.பசலையார்
32.பாரிமகளிர்
33.பூங்கண்ணுத்திரையார்
34.பூங்கண் உத்திரையார்
35.பூதபாண்டியன் தேவியார்
36.பெண்மணிப் பூதியார்
37.பெருங்கோப்பெண்டு
38.பேய்மகள் இளவெயினி
39.பேயனார்
40.பேரெயென் முறுவலார்
41.பொத்தியார்
42.பொன்மணியார்
43.பொன்முடியார்
44.போந்தலைப் பசலையார்
45.மதுவோலைக் கடையத்தார்
46.மாற்பித்தியார்
47.மாற்பித்தியார், இயற்பெயர் பித்தி
48.மாறோக்கத்து நாப்பசலையார்
49.முள்ளியூர் பூதியார்
50.முன்னியூப் பூதியார்
51.வரதுங்க தேவியார்
52.வில்லிபுத்தூர்க் கோதையார்
53.வெண்ணிக் குயத்தியார்
54.வெள்ளி வீதியார்
55.வெறிபாடிய காமக்கண்ணியர்
என பட்டியல் நீளுகிறது. பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கே கூட அவர்கள் விரும்பும் துறைக்கு செல்ல தடைபடுத்தாமல் இருந்ததுதான் பழந்தமிழகம்.
ஒற்றை நாள் அறிவித்து பெண்களுக்கெதிரான வன்முறை களைந்தவர்கள் அல்லர் பழந்தமிழர். அற்றை நாளும் பெண்கள்; பேணும் கருத்தினராக இருந்தனர் தமிழர்.
இன்றைக்கு பெரும்பாலும் தமிழ்ப் பெண்கள் புறத்திற்கு வருவதில்லை. அப்படி வரும் போது பாதுகாப்பான துறைகளை அவர்கள் சார்ந்திருக்கும் குடும்பம் தேர்ந்தெடுத்துத் தருகிறது.
நமது பழந்தமிழகம் போன்று, மீண்டும் எல்லாத் தமிழ்ப் பெண்களும் அவர்கள் விரும்பும் எல்லாத்துறைக்கும், புறத்தே வந்து ஒளிர, நமது பழந்தமிழகத்தின் நெறியான, ‘தமிழியல்’ மீட்கப் பட்டாக வேண்டும்.

  • குமரிநாடன்

நன்றி – மௌவல் இதழ்

#தமிழ்ப்பெண்கள் #சங்ககாலப்பெண்கள் #பெண்பாற்புலவர்கள் #பெண்ணுரிமை #பெண்களின்முன்னேற்றம் #பழந்தமிழகம் #தமிழியல #TamilWomen #SangamAge #WomenPoets #WomensRights #WomenEmpowerment #AncientTamilHistory #TamilCulture

Please follow and like us:

You May Also Like

More From Author